தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார்!
தொண்டி,ஜூலை.31
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை அடுத்த பாசிப்பட்டிணம் மேற்கு தெருவைச் சேர்ந்த ஆலிஃப் மகன் முசமில்(44).இவர் பாசிப்பட்டிணத்தில் சூப் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கடைக்குத்தேவையான இறைச்சி, காய்கனிகளை தொண்டியிலிருந்து வாங்கிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாசிப்பட்டிணத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சொகுசு வாகனம் மோதி சம்பவ இடத்திலே பலியானார். பலியான முசமில் மைத்துனர் அமீர்கான் கொடுத்த புகாரின் அடிப்;படையில் எஸ்.பி.பட்டிணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயப்பிரதா வழக்கு பதிவு செய்து,பிரேதத்தை கைப்பற்றி பிரே பரிசோதனைக்கு திருவாடானை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிறப்பு செய்தியாளர் தாளை.வாசு.ஜெயந்தன்