தொண்டியில் ஹஜ் பெருநாள் என்னும் பக்ரீத் பண்டிகையையொட்டி தொண்டி பெரிய பள்ளிவாசல் திடலில் சிறப்பு தொழுகை
தொண்டி, ஜூலை.21,
இராமநாதபுரம் மாவட்டம், இஸ்லாமியர் அதிகம் உள்ள தொண்டியில் ஹஜ் பெருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டி தொண்டி பெரிய பள்ளிவாசல் திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக குர்பானி கொடுக்க ஆட்டை இறைவனுக்காக பலியிட்டு பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், பெண்கள், குழந்தைகள் அதிகாலையிலே எழுந்து புத்தாடை உடுத்தி தொழுகையில் கலந்துகொண்டனர். இவர்கள் முன்னதாக ஒரு நாள் முழுவதும் நோன்பு இருந்தனர். இதேபோல் நம்புதாளை, எஸ்.பி.பட்டிணம் ஆகிய பகுதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்