தொண்டியில் முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு காவல்துறை சார்பாக விழிப்புணர்வுபணி
தொண்டி, ஆக.7-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் முகக் கவசம் அணியாமல் பலர் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர். கொரோனா தடுப்பு பணியில் வருவாய்துறை,காவல்துறை, சுகாதாரத்துறை, பேரூராட்சிகள் துறை ஈடுபட்டுவரும் நிலையில் பொதுமக்கள் இன்னும் விழிப்புணர்வு இல்லாத நிலையில் உள்ளனர். இதனால் காவல்துறை கூட முகக் கவசம் அணியாதவர்களுக்கு, அபராதம் விதிக்கும் நிலை உள்ளது. அதன்படி தொண்டி புதிய பஸ் நிலையம் அருகே முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்