தொண்டியில் மாற்றுத்திறனாளிகளுக்குக்கான கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முகாம்
தொண்டி, ஜூலை.22,
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே தமிழக அரசும், ஓரிக்கோட்டையில் உள்ள இரக்கத்தின் திருச்சிலுவை கன்னி யாஸ்திரிகளால் நடத்தப்படும் சிறப்பு பள்ளியும், தொண்டி அன்பாலயா மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான உண்டு, உறைவிடப்பள்ளியும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி முகாம்,
இராமநாதபுர மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜோதிலிங்கம் தலைமையில் நடைபெற்றது. தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மினு, ஓரிக்கோட்டை கருணை இல்ல நிர்வாகி லீமாரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்பாலயா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி சவேரியார் அனைவரையும் வரவேற்றார். இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. பகுதி சுகாதார செவிலியர் பத்மா, சுகாதார ஆய்வாளர் சந்தானம் உட்பட பலர் கலந்துகொண்டனர். முகாம் முடிவில் ஓரிக்கோட்டை கருணை இல்ல ஆசிரியை சகோதரி சத்யா நன்றி கூறினார்.
சிறப்பு செய்தியாளர் நம்புதாளை வாசு.ஜெயந்தன்