தொண்டியில் மலுங்கு ஒலியுல்லா தர்ஹா வக்ஃப், வடக்கு தெரு முஸ்லீம் ஜமாத்திற்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்
தொண்டி, ஆக.1
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டியில் மலுங்கு ஒலியுல்லா தர்ஹா வக்ஃப், வடக்கு தெரு முஸ்லீம் ஜமாத்திற்கு தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் 10 உறுப்பினர்களுக்கான தேர்தல் தொண்டி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் உத்தரவின் பேரில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டன. இராமநாதபுரம் சரக வக்பு கண்காணிப்பாளரும், தேர்தல் அதிகாரியுமான அன்வர்தீன் தலைமையில் நடைபெற்றது.

வக்பு ஆய்வாளர் நூருல் ஆலம் இப்ராஹிம், அப்துல் வஹாப், தாரிக் மற்றும் இதர வக்பு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. மொத்தம் 1281 ஆண் வாக்களர்கள் தேர்தல் விதிமுறையின்படி வாக்களித்தனர். இ.எம்.எஸ். சாகுல்ஹமீது ஒரு அணியாகவும், இபுனுசூது மற்றொரு அணியாகவும் மொத்தம் 13 பே ருக்கு 24 பேர் களத்தில் இருந்தனர்.
செய்தியாளர் தாளை வாசு.ஜெயந்தன்