தொண்டியில் பாவோடி ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக 75-ம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், , ஆக.15-
தொண்டியில் பாவோடி ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வடக்கு ஜமாத் நிர்வாகி இஎம்எஸ் சாகுல் ஹமீது தேசிய கொடியை ஏற்றி 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடினர். மேலப்பள்ளி இமாம் முஹம்மது ஹனிப், ஆட்டோ சங்கத் தலைவர் இக்பால், துணைத்தலைவர் அக்பர் பாட்சா, செயலாளர் கலந்தர் உட்பட ஏராளமானோர் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியோடு கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி,மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் எழுதுபொருள், உபகரணங்களும் வழங்கப்பட்டது. சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்