தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 6 மாதமாக குடிதண்ணீர் உடைப்பு
தொண்டி, செப்.23-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையும், தொண்டி – மதுரை சாலையும், மக்கள் அதிகம் பயணிக்கும் மார்க்கெட் பகுதியுமான முக்கிய சாலையில் சுமார் 6 மாதமாக குடிதண்ணீர் உடைப்பு ஏற்பட்டு வீணாகிக்கொண்டிருக்கிறது. இப்பகுதி மக்கள் பலமுறை அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கருமொழி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தொண்டி வழியாக கொடிப் பங்கு உட்பட பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் இக் குடிநீர் தொண்டியில் உடைப்பு ஏற்பட்டு வீணாகிக் கொண்டி ருக்கிறது. தினமும் வீணாகும் இக்குடிநீர் கழிவுகள் கலந்து அருகே உள்ள கிராமங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. மேலும் தொண்டியில் வழிந்தோடும் குடிநீர் தேங்கி கழிவுநீராகி வணிக நிறுவனங்களுக்கு இடையே சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நீண்ட கால மாகவே அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்குடன் உள்ளனர்.குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு அருகே உள்ள கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்பட இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்