முதல் நிலை பேரூராட்சி பகுதியான தொண்டியின் பல்வேறு பகுதியில் 75.ம் ஆண்டு சுதந்திர தின விழாவை பல்வேறு அமைப்பினர் தேசிய கொடியேற்றி கொண்டாடினர்
தொண்டி, ஆக.16-
இராமநாதபுரம் மாவட்டம், முதல் நிலை பேரூராட்சி பகுதியான தொண்டியின் பல்வேறு பகுதியில் 75.ம் ஆண்டு சுதந்திர தின விழாவை பல்வேறு அமைப்பினர் தேசிய கொடியேற்றி கொண்டாடினர் அதன்படி தொண்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தேசிய கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
தொண்டி அருகே நம்புதாளையில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் முனைவர் ஜான் தாமஸ் தலைமையில், பஞ்சாயத்து தலைவி பாண்டிச்செல்வி ஆறுமுகம் தேசிய கொடியினை ஏற்றினார். யூனியன் கவுன்சிலர் சுமதி முத்துராக்கு முன்னிலை வகித்தார். துணை தலைவி, பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் செய்யது யூசுப், பள்ளி மே லாண்மை குழு தலைவி, அனைத்து தெரு தலைவர்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.
தொண்டி எம்.ஆர்.பட்டிணத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் மாணிக்கம் தலைமையில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடினர். அதே போல பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை நல்லாசிரியர் சாந்தி முருகானந்தம் தேசிய கொடியேற்றினார்.
இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன் தேசிய கொடியினை ஏற்றினார். நகர தலைவர் காத்த ராஜா அனைவருக்கும் இனிப்பு வழங்கனார். வட்டார துணை தலைவர் அருள்சாமி உட்பட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பாக ரஹ்மத் அலி கான் தேசிய கொடியை ஏற்றி 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடினர். பகவதி இனிப்பு வழங்கினார். சிறப்பு செய்தியாளர் வாசு. ஜெயந்தன்