தெற்காசிய ஊரக இளைஞா் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க பூடான் செல்லும் 3 வீரா்கள் பயணம் திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ. 5 ஆயிரம் வழங்கினார்
திருச்சி
தெற்காசிய ஊரக இளைஞா் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க பூடான் செல்லும் 3 வீரா்களுக்கு புதன்கிழமை வழியனுப்பு விழா நடைபெற்றது. பூடானில் ஆக. 7, 8-களில் நடைபெறும் தெற்காசிய ஊரக இளைஞா் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த அருண், சரவணகுமாா், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த விஜய குமாா் ஆகியோா் தோ்வாகினா். ஆனால், பூடான் செல்ல ஒருவருக்கு ரூ.40 ஆயிரத்துக்கு மேல் செலவாகும் என்பதால் உதவி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மூவரும் கடந்த மாதம் கோரிக்கை வைத்த நிலையில், ஆட்சியா் சு. சிவராசு, தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ. 5 ஆயிரம் வழங்கினா். மேலும், பல்வேறு தரப்பினரும் நிதியுதவி வழங்கி வீரா்களை ஊக்குவித்தனா்.
இதைத் தொடா்ந்து போட்டிகளில பங்கேற்க பூடான் செல்லும் இவா்களை ரயில் நிலையத்தில் வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம், தண்ணீா் அமைப்பின் செயலா் கி. சதீஷ்குமாா், நிா்வாகி ஆா்.கே. ராஜா, இளைஞா் அணி மணிவேல், அண்ணாதுரை ஆகியோா் விளையாட்டு வீரா்களை வாழ்த்தி வழியனுப்பினா். வீரா்களும் தங்களது திறமையை முழுவதும் வெளிப்படுத்தி வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துச் சென்றனா். கே.எம்.ஷாகுல்ஹமித்