தென் ஆப்பிரிக்காவில் சி.1.2 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது இந்தியாவில் சி.1.2 உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு
திருச்சி
இந்தியாவில் சி.1.2 உருமாறியகரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல லட்சம் மக்களின் உயிரைப் பறித்துள்ளது. இதை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் சி.1.2 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த வைரஸ்வகை இந்தியாவில் இன்னும் பரவவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய சி.1.2 கொரோனா வகைஅதிவேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் தேசிய தொற்றுநோய் நிறுவனம் (என்ஐசிடி) மற்றும் குவாசூலு-நடால் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி வரை சீனா, காங்கோ, மொரீஷியஸ், இங்கிலாந்து, நியூஸிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலையின்போது தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய சி.1 என்ற உருமாறிய கரோனாவில் இருந்து மேலும் உருமாற்றம் அடைந்து இந்த புதிய சி.1.2 உருமாறிய கரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
முதலில் பீட்டா மற்றும் டெல்டா கொரோனா வகைகள் கண்டறியப்பட்ட போது, அவை எப்படிப் பரவியதோ அதுபோலவே இப்போது இந்த பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த உருமாறிய கொரோனாவின் புரத ஸ்பைக் பெரியளவில் உருமாற்றம் அடைந்துள்ளதாகவும் இது சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட வைரஸை விடப் பெரியளவில் மாறியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து ஆஸ்திரேலி யாவின் சிட்னி நகரிலுள்ள வைரஸ்நிபுணரும், நோய்த் தடுப்பு மற்றும்தொற்று நோய்கள் இன்ஸ்டிடியூட்டின் விரிவுரை யாளருமான டாக்டர் மேகன் ஸ்டீன் கூறும்போது, “அந்த குறிப்பிட்ட உருமாறிய வைரஸ் வருவதைப் பார்க்கும்போது, அது என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்கவும், மாறுபாடுகளைக் கண்காணிக்கவும் விரும்புகிறோம். இதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இவை வேகமாக பரவும் தன்மை கொண்டவை எனத் தெரியவந்துள்ளது” என்றார்.
இதுகுறித்து கொல்கத்தாவின் சிஎஸ்ஐஆர் -இந்திய ரசாயன உயிரியல் நிறுவனத்தின் ஆய்வா ளர் உபாசனா ரே கூறும்போது, “உருமாறிய கொரோனா வேகமாகப் பரவும் ஆபத்து உள்ளது. புரதஸ்பைக் பெரியளவில் மாற்றமடைந்துள்ளதால் தடுப்பூசி அளிக்கும் நோயெதிர்ப்பு சக்தியிலிருந்து இது தப்பவும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த கரோனா உலகெங்கும் பரவினால் இது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். எனவே, இந்த வைரஸ் பரவுவதை நாம் முதலில் கட்டுப்படுத்த வேண்டும்” என்றார். ஆனால் இந்த வகை சி.1.2உருமாறிய கொரோனா வைரஸால்இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எம்.கே. ஷாகுல் ஹமீது