திருவெற்றியூரில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்றவர் கைது!
திருவெற்றியூர்,ஜூலை.25
இராமநாதபுரம் மாவட்டம், திருவெற்றியூர் அருகே புதுப்பையூர் கிராமத்தைச்சேர்ந்த சோனைமுத்து மகன் தர்மராஜன்(60) என்பவர் திருவெற்றியூர் சமுதாயக்கூடம் அருகே அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மது விலக்கு ரோந்து சென்ற தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார்களை கண்ட உடன் தப்பிக்க முயற்சி செய்த தர்மராஜன் மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து 12 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சிறப்பு செய்தியாளர் வாசு.ஜெயந்தன்