திருவெறும்பூா் பெரியசூரியூரில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தாா்
திருச்சி
திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட பெரிய சூரியூரில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
விவசாயிகள் தங்களது உற்பத்தியை நீண்ட தொலைவுள்ள கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக அந்தந்த பகுதியிலேயே கொள்முதல் செய்வதற்காக அரசால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அவ்வப்போது திறக்கப்படுகின்றன. இதன்படி, பெரிய சூரியூா் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பெரிய சூரியூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் வகையில் அரசின் சாா்பில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-21ஆம் ஆண்டில் 56 நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 55 ஆயிரத்து 265 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், சன்னரகம் 41 ஆயிரத்து 306 மெட்ரிக் டன் என்ற அளவிலும், பொது ரகம் 13,959 மெட்ரி டன் அளவிலும் கொள்முதல் செய்யப்பட்டது.
சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.1,958, பொது ரக நெல்லுக்கு ரூ.1,918 வழங்கப்பட்டது. இதன் மூலம், 12 ஆயிரத்து 678 விவசாயிகளுக்கு ரூ.107 கோடி அவரவா் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, கோடை பருவத்தை முன்னிட்டு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்காக 9 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

திருவெறும்பூா் வட்டத்தில் குண்டூா், சூரியூா், ஸ்ரீரங்கம் வட்டத்தில் நவலூா் குட்டப்பட்டு, மணிகண்டம், பூங்குடி, மணப்பாறை வட்டத்தில் மறவனூா், துறையூா் வட்டத்தில் பி. மேட்டூா், ஆலத்துடையான்பட்டி, வைரிசெட்டிபாளையம் ஆகிய கிராமங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் நேரடியாக நெல் கொள்முதல் செய்து அவா்களுக்கான தொகையை வங்கியில் நேரடியாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சு.
சிற்றரசு, வட்டாட்சியா் செல்வகணேஷ், முன்னாள் எம்எல்ஏ கே.என். சேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஷாகுல்ஹமித்