திருவெறும்பூர் பகுதியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ. 29 லட்சத்து 50 ஆயிரம் செலவில் குடிநீர் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
திருச்சி,
திருவெறும்பூர் பகுதியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் பகுதியில் ரூ. 29 லட்சத்து 50 ஆயிரம் குடிநீர் அடிபம்பு மற்றும் குடிநீர் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் திருவெறும்பூர் அருகே உள்ள பனையங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ ஆர் கே நகர், சர்க்கார்பாளையம் பகுதிகளில் தலா ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் அடிபம்புகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும் பனையக்குறிச்சி ஊராட்சி பகுதியில் மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன் ஆகியோர் வளர்ச்சி நிதியில் தலா ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலைகளை திறந்து வைத்தார்.

பின்னர் வேங்கூர் அருகே உள்ள முருக்கூர், பத்தாளப்பேட்டை விநாயகர் கோயில், கிளியூர் விளாங்குளம் ஆகிய பகுதிகளில் தலா ரூ. 2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் தனது தொகுதி வளர்ச்சி நிதியின் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய மினி பவர் மினிடேங் மற்றும் கிளியூர் விளாங்குளம் பகுதியில் ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். சர்க்கார் பாளையத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என். சேகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி, திருவெறும்பூர் ஒன்றியக்குழு தலைவர் சத்யா கோவிந்தராஜன், அழகு செந்தில் ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், திமுக நிர்வாகிகள் மயில் பெரியசாமி திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கே.எம்.ஷாகுல்ஹமித்