திருவெறும்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியில் திட்டங்கள் தொடக்க விழா
திருச்சி, ஜூலை.25,
திருச்சி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நவல்பட்டு ஊராட்சி நவல்பட்டு ஊராட்சி வார்டு எண் 29 அண்ணாநகர் ஸ்பேஸ் 1 தார்சாலை திட்ட மதிப்பு 6 75,000, அண்ணாநகர் ஸ்பேஸ் 3 திட்ட மதிப்பு 4 50,000 மதிப்பிலான கான்கிரீட் சாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அர்ப்பணித்து வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் சிறப்பு நிதியில் இருந்து வாழவந்தான் கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்மில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அதனுடன் இணைந்த பைப்லைன் உடன் கூடிய குடிதண்ணீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
முகாமில் வசிக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினர் மானியத்துடன் கூடிய கடனுக்காண காசோலையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பத்து குழுக்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ஐந்து லட்ச ரூபாய்
பெற்றுக்கொண்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வில் திருவெறும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ .சேகரன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கே.எஸ்.எம். கருணாநிதி, மாரியப்பன், நவல்பட்டு சண்முகம் ,காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், கூத்தைப்பார் பேரூர் செல்வராஜ், ஒன்றியக்குழுத் தலைவர் சத்யாகோவிந்தராஜ், பழனியப்பன், கங்காதரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆனந்தன்