திருவெறும்பூரில் பள்ளியை ஆய்வு செய்தார் மக்களின் தேவைகளை அறிந்து பணி செய்ய வேண்டும் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி பேச்சு
ஜூலை.31,
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்அருகிலுள்ள பூலங்குடி காலனியில் அமைந்துள்ள பள்ளிக்கு சேர்ப்பதற்கான முகாமை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளை ஆய்வு செய்துபள்ளிகளில் அடிப்படை கட்டமைப்புகளையும் மாணவர்கள் மாணவிகள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள் மற்றும் ஸ்மார்ட்கிளாஸ் கணினிஅறை ஆய்வகங்கள் நூலகங்கள் ஆகியவைகளை ஆய்வு செய்து வருகிறார்.அதன் தொடர்ச்சியாக பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய இடைநிற்றல் மாணவர்களை பள்ளிக்கு கொண்டு வருவதற்காக மாவட்டக்கல்வி அதிகாரிகள் வட்டார கல்வி அதிகாரிகள் பணிக்கப்பட்டனர்.
பூலாங்குடி காலனியில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளிக்கு அருகில் உள்ள நரிக்குறவர் காலனியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ,ஆசிரியைகளின் முயற்சியால் ஐந்து மாணவர்கள் பள்ளிக்கல்வி அமைச்சர் முன்னிலையில் தங்களது படிப்பைத் தொடங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் பேசும்போது நமது திமுக தலைவரும் தமிழக முதல்வருமான எங்களுக்கு நீங்கள் பொது மக்களிடம் வாக்குகளை கேட்பதற்கு மட்டும் அவர்களிடம் செல்லக்கூடாது .வெற்றிபெற்ற பிறகு அவர்களை நாடிச் சென்று அவர்களுடைய தேவைகளை அறிந்து அவர்களுக்கு பணிகளை செய்யவேண்டும் என எங்களை கேட்டுக்கொண்டார். ஆனந்தன்