திருவாடானை பஞ்சாயத்து அரசு பள்ளியின் நிலையும் முன்னேற்றமும்
திருவாடானை, ஜூலை.21-
இராமநாதபுரம் மாவட்டடம், திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட தொண்டி மேற்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் சாந்தி என்பவர் 2021-2022 ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் புதியதாக 51 மாணவ மாணவிகளை சேர்க்கை செய்தும் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 196 மாணவ, மாணவிகளை சேர்த்து, பள்ளிச் சேர்கையில் சாதனை படைத்துள்ளார். இவரது கல்விப்பணியை பாராட்டி முதன்மைக் கல்வி அலுவலகத்தில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்விஅலுவலர், மாவட்ட உதவி கல்வி அதிகாரி மற்றும் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
சிறப்பு செய்தியாளர் நம்புதாளை. வாசு.ஜெயந்தன்