திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பகுதியில் ரூ .12 லட்சம் மதிப்பிலான
4 குடிநீர் தொட்டிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என் ..நேரு திறந்து வைத்தார்
ஜூலை.19-
திருச்சி மாவட்டம்,(54 அ)- வது வட்டம் உறையூர் புதுபாய்க்காரத் தெருவில் ஆழ்துளை குடிநீர் குழாயை பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுதமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறைஅமைச்சர் கே.என்.நேரு மேற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 9 லட்சம் செலவில்( 54 அ )வார்டுக்கு உட்பட்ட புது பாய் கார தெரு புத்தூர் அக்ரஹாரம் உள்ளிட்ட 4 இடங்களில் ரூ 3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல் மற்றும் சின்டெக்ஸ் ிகுடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியல் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான். நகர பொறியாளர் அமுதவல்லி, கோ அபிஷேகபுரம் கோட்ட உதவி ஆணையர் வினோத் , மாநகரச் செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், இளங்கோ, புத்தூர் தர்மராஜ், என்ஜினியர் மோகன்ராஜ், வட்டச் செயலாளர்கள் ராபின்சன், பூலோகநாதன், வண்ணை மோகன், இளையராஜா, கமால், ரவிச்சந்திரன், துணைச் செயலாளர்கள் புயல் கிருஷ்ணன், கார்த்திகேயன், ஆன்ட்ரூஸ், பூக்கடை ரவிசங்கர், எம்.கே.குமார், செந்தில், நந்து, காட்டூர் சிவா, ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவிற்கு பின்னர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட அமைச்சர் கே.என்.நேரு மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதில் கலந்து கொண்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் கூடிய முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். ஆனந்தன்