திருச்சி மாவட்ட ஜமாத் அத்துல் உலமா சபை சார்பில் வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மானுக்கு ஜாமி ஆ அன்வாரூல் உலூம் அரபுக்கல்லூரி முதல்வர் முப்தி ரூஹுல் ஹக் ஹழ்ரத் தலைமையில் வரவேற்பு
திருச்சி,
திருச்சி மாவட்ட ஜமாத் அத்துல் உலமா சபை சார்பில் புதிதாக பொறுப்பேற்ற பிறகு திருச்சிக்கு நேற்று வருகை தந்த தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மானுக்கு அன்வாரூல் உலூம் அரபுக்கல்லூரி முதல்வர் முப்தி ரூஹுல் ஹக் ஹழ்ரத் தலைமையில் வரவேற்பு அளித்தார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக கடந்த 22.97 2021 அன்று பொறுப்பேற்றார். பின்னர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னையில் இருந்து ரயில் மூலம் 28. 07.2021 புதன்கிழமை அதிகாலை திருச்சி ரயில்வே நிலையம் வந்தார்.
அவருக்கு திருச்சி தெற்கு மாவட்ட முஸ்லிம் லீக் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் பல்வேறு ஜமாஅத் நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் திருச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அப்துல் ரஹ்மானுக்கு பாராட்டு விழா காஜா நகரில் உள்ள ஜாமிஆ அன்வாரூலும் அரபிக்கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாசபை வழிகாட்டுக்குழு உறுப்பினரும், ஜாமி ஆ அன்வாரூல் உலூம் அரபுக்கல்லூரி முதல்வர் முப்தி ரூஹுல் ஹக் ஹழ்ரத் தலைமை வகித்தார். பின்னர் தலைவர் எம். அப்துல் ரஹ்மானுக்கு பாராட்டு மற்றும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
விழாவில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநிலப் பொருளாளர் மவ்லவி முஹம்மது மீரான் மிஸ்பாஹி, முப்தி உமர் பாரூக் மகழரி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சிராஜுதின், அப்துல் முத்தலிப், வார்டு தலைவர் அமீருதின், மற்றும் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள், உலமாக்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். கே.எம்.ஷாகுல்ஹமித்