திருச்சி மாவட்டம், காந்தி மார்க்கெட் ஏ.ஐ.டி.யு.சி. தள்ளுவண்டி. ,தரை கடை வியாபாரிகளின் காத்திருக்கும் போராட்டம்
வியாபாரிகளின் காத்திருக்கும் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக ஓத்திவைப்பு.
காந்தி மார்க்கெட்டுக்கு வெளியே தள்ளுவண்டியில் பழ வியாபாரமும். கிராமப்புற பெண்கள் தரைகடை என 100க்கும் மேற்பட்ட கடைகளை காந்தி மார்க்கெட் காவல்துறையினர். அகற்றினர்.எனவே மீண்டும் அவர்களை தஞ்சை ரோடு.மணி கூண்டு பகுதிகளில் மீண்டும் கடை போட அனுமதி கேட்டு திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி உதவி ஆணையரிடம் மனு கொடுத்து எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி, தரைக் கடை வியாபாரிகள் அரியமங்கலம் கோட்ட அலுவலகம் உள்ளே கடை போட அனுமதி கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். அங்கு வந்த பாலக்கரை காவல் ஆய்வாளர். மற்றும் அரியமங்கல கோட்ட உதவி ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி நாளை மாலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் காந்தி மார்க்கெட் சம்பந்தமாக கூட்டம் நடைபெறுகிறது அதில்ஏஐடியுசி சார்பில் கலந்துகொண்டு தங்கள் கருத்தை தெரிவியுங்கள் என்று கூறியதன் அடிப்படையில்ஏஐடியுசி தள்ளுவண்டி சங்க போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனந்தன்