திருச்சி மாவட்டத்தில் 2 நாள்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள்
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 18 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா 2 ஆவது அலை பரவலை கட்டுப்படுத்த திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களுக்கு 14 ஆயிரம் கோவிஷீல்டு, 4 ஆயிரம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் கடந்த புதன்கிழமை திருச்சி வந்ததையடுத்து வியாழக்கிழமை 14 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் அதிகம் போ் ஆா்வத்துடன் வந்ததால் அவா்களில் பலா் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜி.ஹெச்.சி.எல் நிறுவன வளாகத்தில் 500 தடுப்பூசி, திருச்சி இ.ஆா்.மேல்நிலைப்பள்ளியில் 400, காஜாமலை பாரதிதாசன் பல்கலை வளாகத்தில் 600, தென்னூா் பள்ளிவாசலில் 300, நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய முகாமில் 100, யங் இந்தியா அமைப்பு சன்ஜீவி நகா் முகாமில் 200, கலையரங்கம்-தேவா் அரங்கில் 1000, என்ஐடி நிறுவன வளாகம் 300 உள்பட 4 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி என கடந்த 2 நாள்களில் மட்டும் 18 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் இதுவரை சுமாா் 3.6 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி பணி நிறுத்தம்: தடுப்பூசி போதிய இருப்பு இல்லாததால் சனிக்கிழமை முதல் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுகிறது. தடுப்பூசி வந்தவுடன் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் எனத் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அறிக்கையில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாகுல்ஹமித்