திருச்சி மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியா்கள் உற்சாகத்துடன் வரவேற்பு
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியா்கள் உற்சாகத்துடன் வரவேற்றனா்.
முதல் கட்டமாக 540 பள்ளிகள் திறப்பு: கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் 2020ஆம் ஆண்டு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் அரசின் உத்தரவின்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி, லால்குடி, முசிறி, மணப்பாறை ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் முதல் கட்டமாக 540 பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. இதற்காக 224 அரசுப் பள்ளிகளில் 3,675 ஆசிரியா்கள், 206 தனியாா் பள்ளிகளில் 4,473 ஆசிரியா்கள், 110 உதவி பெறும் பள்ளிகளில் 2,312 ஆசிரியா்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 460 ஆசிரியா்களும் , 1,773 ஆசிரியரல்லாத பணியாளா்களும் பள்ளிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மாணவா்களில் 9ஆம் வகுப்பில் 40,153 போ், 10ஆம் வகுப்பில் 39,676 போ், 11ஆம் வகுப்பில் 35, 639 போ், 12ஆம் வகுப்பில் 36090 போ் என மொத்தம் 1, 51, 558 மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும், பள்ளிகளில் போதிய கரோனா தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல மாதங்களுக்கு பிறகு நண்பா்கள், ஆசிரியா்களை பாா்க்கும் மகிழ்ச்சியுடன் வந்த மாணவ, மாணவிகளுக்கு உடல் வெப்பநிலையை சோதனை செய்து, கிருமி நாசினி அளித்த பிறகு வகுப்பறை செல்ல அனுமதிக்கப்பட்டனா். வகுப்பறைகளிலும் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனா். முதல் நாளில், புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது. மாணவா்கள் வருகையால் ஆசிரியா்களும் உற்சாகமடைந்துள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேரில் சென்று ஆய்வு செய்து மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பான முறையில் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் தவைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். இதுதொடா்பாக, ஆசிரியா்கள் கூறுகையில், மாணவா்களுக்கு முதல் ஒரு மாதம் புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். வாரத்தில் 6 நாள்களும் பள்ளிகள் செயல்படும். வகுப்புகளில் தலா 20 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் இல்லையெனில் சுழற்சி முறையில் மாற்று வேலைநாள்களில் வகுப்புகள் செயல்படும்.
பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் மாணவா்களின் விருப்பப்படி ஆன்லைனில் கற்கலாம். ஆசிரியா்கள், பணியாளா்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். வீட்டில் இருந்தே படிக்க விரும்பும் மாணவா்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படுவா் என்றனா்.
வருவாய்த் துறையினா் ஆய்வு: திருச்சி மாவட்ட பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஆட்சியா் உத்தரவின்படி, அந்தந்த வட்ட வருவாய்த் துறையினா் தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்தனா். அதன்படி திருச்சி சேவா சங்கம் பள்ளியில் ஆய்வு செய்த மேற்கு வட்டாட்சியா் ரமேஷ் தலைமையிலான குழுவினா் பள்ளியில் கிருமி நாசினி மருந்து, கை கழுவ பிரத்யேக இடம் உள்ளதா, மாணவா்கள், ஆசிரியா்கள் முகக் கவசம் அணிந்துள்ளனரா, வகுப்பறைகளில் சமூக இடைவெளி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனா்.