திருச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 8.12 கோடியில் 470 வழக்குகளுக்குத் தீா்வு
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 8.12 கோடியில் 470 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு வழிகாட்டுதலின் படி நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் நோக்கில் திருச்சி மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான கிளாஸ்டன் பிளசட் தாகூா் தொடங்கி வைத்தாா்.
இதன்படி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 3, மணப்பாறை, துறையூா், லால்குடி, முசிறி, ஸ்ரீரங்கத்தில் தலா 1 என 8 அமா்வுகள் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு அமா்விலும் நீதிபதிகள், வழக்குரைஞா், தன்னாா்வலா்கள் இடம் பெற்றனா். இவா்கள் வழக்காடிகள் இரு தரப்பினரையும் கலந்தாலோசித்து, வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு கண்டனா்.
குறிப்பாக, சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை, மோசடி வழக்குகள், வங்கிக் கடன் வசூல் வழக்குகள், மோட்டாா் வாகன வழக்குகள், தொழிலாளா் நிவாரண வழக்குகள், குடும்ப நல வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள், உரிமையியல் தொடா்புடைய வழக்குகள், வங்கி மற்றும் நிதி நிறுவன வழக்குகள் என 1,433 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ரூ. 8.12 கோடி பணப்பலன்களை உடைய 470 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது. ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான கே. விவேகானந்தன் உள்ளிட்டோா் செய்தனா்.

கே.எம். ஷாகுல்ஹமித்