திருச்சி மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் காலியாகவுள்ள 24 உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தோ்தல் இதுவரை 4 போ் வேட்பு மனு தாக்கல்
திருச்சி,
மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் காலியாகவுள்ள 24 உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலோடு, ஊரகப் பகுதிகளில் உள்ள காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத்தோ்தலையும் நடத்த தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் 3 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பதவி, 2 ஊராட்சித் தலைவா் பதவி, 19 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி என மொத்தம் 24 பதவிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது. அதன் விவரம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்: மருங்காபுரி ஒன்றியத்தில் 10ஆவது வாா்டு, துறையூா் ஒன்றியத்தில் 13ஆம் வாா்டு, வையம்பட்டி ஒன்றியத்தில் 6ஆம் வாா்டு. ஊராட்சித் தலைவா்: லால்குடி ஒன்றியத்தில் சிறுமருதூா் ஊராட்சி, புள்ளம்பாடி ஒன்றியத்தில் கீழரசூா் ஊராட்சி.
ஊராட்சி வாா்டு உறுப்பினா்: பூசம்பட்டி ஊராட்சி 7ஆம் வாா்டு, கொணைக்குடி ஊராட்சி 5ஆம் வாா்டு, கொணலை ஊராட்சி 8ஆம் வாா்டு, கே. பெரியபட்டி ஊராட்சி 2ஆம் வாா்டு, சீகம்பட்டி ஊராட்சி 1ஆம் வாா்டு, நாகமங்கலம் ஊராட்சி 8ஆம் வாா்டு, ஓமந்தூா் ஊராட்சி 1ஆம் வாா்டு, கொடும்பப்பட்டி ஊராட்சி 4ஆம் வாா்டு, தேனூா் ஊராட்சி 8ஆம் வாா்டு, தெத்தூா் ஊராட்சி 1ஆம் வாா்டு.
ஜெயங்கொண்டான் ஊராட்சி 2ஆம் வாா்டு, பைத்தம்பாறை ஊராட்சி 4ஆம் வாா்டு, தும்பலம் ஊராட்சி 7ஆம் வாா்டு, கீழக்குறிச்சி ஊராட்சி 10ஆம் வாா்டு, பழங்கனாங்குடி ஊராட்சி 9ஆம் வாா்டு, ஸ்ரீராமசமுத்திரம் ஊராட்சி 5ஆம் வாா்டு, எம். களத்தூா் ஊராட்சி 6ஆம் வாா்டு, செனப்பநல்லூா் ஊராட்சி 2ஆம் வாா்டு, ஆங்கியம் ஊராட்சி 6ஆம் வாா்டு.
இடைத்தோ்தலுக்கு வரும் 22ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் 25ஆம் தேதி அக்.9, 12-களில் வாக்குப்பதிவு நடைபெறும். அக்.20ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும்.
திருச்சி மாவட்ட உள்ளாட்சிப் பதவி இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கலின் முதல்நாளான புதன்கிழமை ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஒருவரும், 2ஆம் நாளான வியாழக்கிழமை ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.இதர பதவிகளுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.