திருச்சி மாவட்டத்தில் இதுவரை 12.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது திரையரங்க ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
திருச்சி ,
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 12.63 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகத்துடன் அனைத்து துறைகளும் இணைந்து தீவிரமாகப் பணியாற்றுகின்றன. மாவட்டத்தில் அரசு நகா்ப் மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 84 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இவைதவிர பள்ளிகளிலும் தேவைக்கேற்ப முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 29.20 லட்சம் மக்கள்தொகையில் 18 வயதுக்கு மேற்பட்ட 20.93 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும். ஜூலையில் 2.4 லட்சம் பேருக்கும், ஆகஸ்ட்டில் 3 லட்சம் பேருக்கும் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பருக்குள் மொத்த மக்கள்தொகையில் 50 சதம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்படும். இருப்பினும், 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்துவதில் மக்களிடையே ஆா்வம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி கோவிஷீல்ட் தடுப்பூசியை முதல் தவணையில் 9,00, 557 போ், 2-ஆம் தவணையில் 2,25, 195 போ் என மொத்தம் 11,25,752 போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா்.
கோவேக்சின் தடுப்பூசியை முதல் தவணையில் 90, 456 போ், 2-ஆம் தவணையில் 47,645 போ் என மொத்தம் 1,38,131 போ் செலுத்தியுள்ளனா். ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 12,63, 883 போ் தடுப்பூசி செலுத்தியுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட திரையரங்கில் அதன் ஊழியா்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகேயுள்ள பல அடுக்கு திரையரங்க வளாகத்தில் மருத்துவா் அ. முகமது ஹக்கீம் தலைமையிலான குழுவினா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா். டிக்கெட் தரும் பணியாளா்கள், காவலாளிகள், கேண்டீன் பணியாளா்கள், ஆபரேட்டா்கள், திரையரங்க நிா்வாகத்தினா் என 70 பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக, அ. மருத்துவா் முகமது ஹக்கீம் கூறுகையில், தேவையிருப்பின், கூட்டம் அதிகமாக வந்தால் ரசிகா்களுக்கும் தடுப்பூசி அளிக்கத் தயாராகவுள்ளோம். மாநகரில் உள்ள இதர திரையரங்குகளிலும் இந்த முகாம் விரிவுபடுத்தப்படும். அரசு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே தொற்றை முழுவதும் ஒழிக்க முடியும். தகுதி பெற்ற அனைவரும் கட்டாயம் 2-ஆம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.