திருச்சி மாவட்டத்தில் இதுவரை இதுவரை 4.67 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது கூடுதலாக 20,800 தடுப்பூசிகள் வந்துள்ளது மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு பேட்டி.
திருச்சி மாவட்டத்துக்கு கூடுதலாக 20,800 தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளதாக மேலும் இதுவரை 4.67 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் மற்றும் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம், மணப்பாறை பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடுப்பூசி மையங்களை நடைபெற்று வரும் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் தடுப்பூசி போடுவதால் எதாவது தொந்தரவு வந்தால் எப்படி இருக்க வேண்டும் அறிவுரை வழங்கினார்.
பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு செய்தியாளரிடம் கூறியதாவது : திருச்சி மாவட்டத்துக்கு வரப்பெற்ற தடுப்பூசிகளைக் கொண்டு இதுவரை 4.67 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளன. திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வரப்பெற்ற ஒதுக்கீட்டின்படி மாற்றுத் திறனாளிகளுக்காக மட்டும் புதன்கிழமை தடுப்பூசி அளிக்கப்பட்டது.
பெரும்பாலான இடங்களில் மாற்றுத் திறனாளிகள் குறைவாக வந்தததால், பிற்பகலுக்கு மேல் 2ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தாதவா்கள், புதிதாக வந்தோருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, மாவட்டத்துக்கு வந்த 15 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி, 5,800 கோவாக்ஸின் தடுப்பூசிகளை மாநகரம், நகரம், ஊரகப் பகுதிகளுக்கும் பிரித்து வழங்கி முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநகரப் பகுதிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பள்ளிகளில் முகாம் நடத்தப்படுகிறது. ஊரகப் பகுதிகளிலும் பள்ளிகளில் முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் நவல்பட்டு, இனாம்குளத்தூா், குழுமணி, சிறுகாம்பூா், புதூா் உத்தமனூா், வளநாடு, புத்தாநத்தம், புள்ளம்பாடி, வையம்பட்டி, தண்டலைப்புத்தூா், மேட்டுப்பாளையம், வீரமச்சான்பட்டி, காட்டுப்புத்தூா், உப்பிலியாபுரம் ஆகிய 14 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி அளிக்கப்படும். சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
ஷாஹுல் ஹமீது.