திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிக்கு பாடுபடுவது என முடிவெடுத்து தீர்மானம்
திருச்சி, ஜூலை.09,
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட மகளிரணிச் செயலாளரும் , செயற்குழு உறுப்பினருமான டாக்டர் தமிழரசி சுப்பையா தலைமையில் திருச்சி தென்னூரிலுள்ள மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான வெல்ல மண்டி என்.நடராஜன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் வனிதா , பேரவை செயலாளர் பத்மநாதன்,பகுதி செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் அன்பழகன் சுரேஷ் குப்தா ஏர்போர்ட் விஜி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் அக்தர் பெருமாள் தேன்மொழி இந்திரா ஜெயஸ்ரீ உள்ளிட்ட அனைவரும் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர் . கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணி மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. ஆனந்தன்