திருச்சி மாநகர் மாவட்டத்தில் அமமுகநிர்வாகிகள் கூண்டோடு வலகி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்கள்
திருச்சி மாநகர் மாவட்டத்தில் அமமுகநிர்வாகிகள் கூண்டோடு வலகி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்கள்
எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் மற்றும் திருச்சி மாநகர முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் முன்னிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்து அமமுக மாநில இளைஞரணி தலைவர் ஜோதிவாணன் உள்பட திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 13 பேர்,
அதிமுகவில் இணைந்தனர்.
அமமுக மாநில இளைஞர் பாசறை தலைவர் ஜோதிவாணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலாஜி, மாவட்ட பேரவை தலைவர் ராஜா, மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி தலைவர் பாபு, மாவட்ட அமைப்பு செயலாளர் சொக்கலிங்கம், மாநகர வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கௌசல்யா, நெசவாளர் அணி செயலாளர் சீனிவாசன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் வேலு, பாலகரை பகுதி செயலாளர் கண்ணன், ஏர்போர்ட் பகுதி இணைச் செயலாளர் நாகராஜ், வட்ட கழக செயலாளர்கள் கணேசன், சரவணன் ஆகியோர் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தமைக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக பகுதி செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ்.பூபதி, ஜவஹர்லால் நேரு மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர். கே.எம்.ஷாகுல்ஹமித்