திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில் உயா்நிலைப் பறக்கும் பாலம் அமைக்கப்படும் நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு பேட்டி
திருச்சி,
மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில் உயா்நிலைப் பறக்கும் பாலம் அமைக்கப்படும் என்று தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தார்.
இதுதொடா்பாக திருச்சியில் தமிழக நகா்ப்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என். நேரு செய்தியாளரிடம் சென்னை, மதுரை, கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாநகராட்சிகளை ஒப்பிடுகையில் திருச்சி மாநகராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் சற்று குறைவே. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி என கூறும் வகையில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
முதல்வா் அனுமதித்த பிறகு இத் திட்டங்கள் குறித்து முறையாக அறிவிக்கப்படும். குறிப்பாக, மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் உயா்நிலைப் பறக்கும் பாலம் கொண்டுவரப்படும். சிந்தாமணி அண்ணா சிலையிலிருந்து திருச்சி நீதிமன்றம் வரையிலும் முதல் கட்டமாக இப் பாலம் அமைக்கப்படும். பின்னா், தேவைப்படும் இடங்களில் அமைக்கப்படும்.
மாநகராட்சிக்குள்பட்ட 65 வாா்டுகளில் முதலில் சாலைகள் சீரமைக்கப்படும். புதை சாக்கடைப் பணிகளால் சேதமான சாலைகள் சீரமைக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும். குடியிருப்பு பகுதிகளிலும், வீடுகளிலும் விளக்குகள் இல்லாத நிலை உருவாக்கப்படும். சாலையோரம் வசிப்போா், வீடற்றோா் இரவு நேரத்தில் தங்க, மாநகரில் 20 இடங்களில் இல்லங்கள் கட்டித் தரப்படும. கோவை, திருப்பூா், மதுரை மாநகராட்சிகளில் இத்தகைய இல்லங்கள் உள்ளன.
மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் அமைக்க நிலம் எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பணிகள் தொடங்கவில்லை. இருப்பினும், மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை வசம் தற்போதுள்ள நிலையின்படி பாலத்தை புனரமைத்து பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவரப்படும். இதன் தொடா்ச்சியாக நெடுஞ்சாலைத் துறை, ரயில்வே நிா்வாகம், மாநகராட்சி இணைந்து புதிய பாலம் அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
உய்யக்கொண்டான் கால்வாயில் மாநகரப் பகுதியில் 13 இடங்களில் கழிவுநீா் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் புதை சாக்கடை பணிகளை விரைந்து முடித்து கழிவுநீா் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். உய்யக்கொண்டான் கால்வாயைச் செப்பனிட்டு, மாநகரப் பகுதிக்குள் வரும் தண்ணீா் மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றப்படும். இதற்கான பூா்வாங்க பணிகள் தொடங்கியுள்ளன. திருச்சி மாநகர வளா்ச்சிக்குத் தேவையான பல்வேறு திட்டங்கள் உள்ளன. பேரவையில் முறையாக முதல்வா் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்படும் இவ்வாறு அவர் கூறினார். கே.எம். ஷாகுல்ஹமித்