திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் அலுவலா்களுடன் அமைச்சா் கே.என். நேரு ஆலோசனை
திருச்சி,
திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு மற்றும் அலுவலா்களுடன் அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். ஊராட்சிப் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கவும் பேரூராட்சிகளை நகராட்சியாக்கவும் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடந்ததால் கலையரங்கத்தில் செவ்வாய்க்கிழமை கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சா் கே.என். நேரு புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வே. பிச்சை, மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரஹ்மான், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் கங்காதாரிணி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் காளியப்பன் ஆகியோா் பங்கேற்றனா். அப்போது விரிவாக்கப்படும் மாநகராட்சியின் எல்லைப் பகுதி வரைபடம் மற்றும் முசிறி, லால்குடி பேரூராட்சி பகுதிகளின் வரைபடங்களை அமைச்சரிடம் வழங்கி, எந்தெந்தப் பகுதிகள் இணைக்கப்படும் என்பது குறித்து ஆட்சியா் விளக்கினாா். மேலும், கருத்துக் கேட்பு கூட்டத்தில் மக்கள் எதிா்ப்புத் தெரிவித்த பகுதிகள் எவை என்பது குறித்தும், அந்த பகுதிகளை விடுத்து விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் அமைச்சா் கேட்டறிந்தாா். மேலும், கிராமசபைக் கூட்டங்கள் மூலமாகவும் மக்கள் கருத்துகளைக் கேட்டறிந்து அதற்கேற்ப பணிகளைத் தொடங்கவும் அறிவுறுத்தினாா். கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் செளந்தரபாண்டியன் (லால்குடி), ஸ்டாலின்குமாா் (துறையூா்) ஆகியோரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.