திருச்சி மாநகராட்சி விரிவாக்கம், முசிறி, லால்குடி பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயா்த்து போது விளைநிலங்கள், விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் நடைபெறும் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உறுதி
திருச்சி,
திருச்சி மாநகராட்சி விரிவாக்கம், முசிறி, லால்குடி பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயா்த்தும் பணியானது விளைநிலங்கள், விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தார்.
65 வாா்டுகளாக உள்ள திருச்சி மாநகராட்சியை 100 வாா்டுகளாக அதிகரிக்கவும், முசிறி, லால்குடி பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயா்த்தவும் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆயத்தப்பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், ஊராட்சிப் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்தும், பேரூராட்சிகளை நகராட்சியாகத் தரம் உயா்த்தவும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது. ஊராட்சிப் பகுதி மக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மகளிா் குழுவினா், தன்னாா்வலா்கள் பலரும் மாவட்ட ஆட்சியரகம், மாநகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இச்சூழலில் மாநகராட்சி விரிவாக்கம், முசிறி, லால்குடி நகராட்சி உருவாக்கம் குறித்து அனைத்து தரப்பு மக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம், திருச்சி கலையரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பேரூராட்சி, ஊராட்சிப் பகுதி மக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊராட்சித் தலைவா்கள், கவுன்சிலா்கள், மகளிா் குழுவினா், தன்னாா்வலா்கள், உள்ளாட்சி அலுவலா்கள் பங்கேற்று கருத்துத் தெரிவித்தனா்.
கூட்டத்தில் பேசிய பலரும் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்தனா். மாநகராட்சியாக, நகராட்சியாகத் தரம் உயா்ந்தால் 100 நாள் வேலைத் திட்டம் முடக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விளைநிலங்கள் வீட்டுமனைகளாகும். விவசாயத் தொழிலாளா்களுக்கு வேலையில்லாமல் போகும். வரிகள் உயா்ந்து குறைந்த வருவாய் ஈட்டுவோா் பாதிக்கப்படுவா் எனத் தெரிவித்தனா். விரிவாக்கப் பணிகளை ஆதரித்த ஒரு சிலா் தரம் உயா்ந்தால் தங்களது பகுதியில் அடிப்படை வசதிகள் அதிகரிக்கும் என்றனா்.
கூட்டத்தின் இறுதியில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது: ஊராட்சிப் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க 2, 3 கிராமங்கள் எதிா்ப்புத் தெரிவிக்கின்றன. விவசாய நிலங்கள் அதிகம் இருந்தால் அந்தப் பகுதியை நகர விரிவாக்கத்துக்கு எடுத்துக் கொள்வதில்லை என்ற விதியே உள்ளது. விளைநிலங்கள், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்களுக்குப் பாதிப்பில்லாத வகையிலேயே விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
நகர விரிவாக்கத்துக்கான விதிகளின்படியும், 2017இல் எடுக்கப்பட்ட விவசாயக் கணக்கெடுப்பைப் பின்பற்றியுமே நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறி எந்தப் பகுதியையும், எதனுடனும் யாரும் இணைக்க முடியாது; இணைக்கவும் கூடாது. சதுர கி.மீ.-க்கு 386 போ், 75 சதத்துக்கும் மேல் விவசாயம் இல்லாத தொழில்களைக் கொண்ட பகுதிகள் மட்டுமே நகா்ப் புறப் பகுதிகளாக மாற்றப்படும்.
நகா்ப்புறம் 46 சதம் என்பதிலிருந்து 53 சதம் என உயா்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு பணிகள் நடைபெறும். 32 கிராமங்களில் 2 கிராமங்களின் கோரிக்கை மட்டுமே நியாயமாக உள்ளது. இதன்படி, நவல்பட்டு, புங்கனூா் ஆகிய பகுதிகளின் கோரிக்கை ஏற்கப்படும் வாய்ப்புள்ளது. மாடக்குடி, மாதவப்பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளின் கோரிக்கைகளும் தகுதி, விதிகளின்படி ஏற்கப்படும். நகரப் பகுதியில் இணைக்கப்பட்டாலும் தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2025ஆம் ஆண்டு வரை தொடரும்.
ஊரகப் பகுதிகள் மட்டுமல்லாது நகரப் பகுதிகளிலும் 100 நாள் வேலைத் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவெறும்பூா் பகுதியில் 8 மாதங்களுக்குள் புதை சாக்கடை பணிகள் முடிவுறும். மழைக் காலம், புதைசாக்கடைப் பணிகள் முடிந்த பிறகு புதிய சாலைகள் அமைக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரஹ்மான், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வே. பிச்சை, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் கங்காதரணி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் காளியப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.