திருச்சி மாநகராட்சி சாா்பில் மறுசுழற்சியில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சி நகரப் பொாறியாளா் எஸ். அமுதவல்லி தொடங்கி வைத்தார்
திருச்சி ,
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா நிகழ்வுகளையொட்டி, திருச்சி மாநகராட்சி சாா்பில் மறுசுழற்சியில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வீடுகளில் உற்பத்தியாகும் குப்பைக் கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் வகையிலான கைவினைப் பொருள்கள் கண்காட்சி, மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கண்காட்சியை நகரப் பொாறியாளா் எஸ். அமுதவல்லி, செயற்பொறியாளா்கள் பி.சிவபாதம், ஜி.குமரேசன் ஆகியோா் தொடங்கி வைத்து பாா்வையிட்டனா்.
ஜியோ கோ், கங்கா ஆா்கானிக் பாா்ம், மற்றும் நுண் உரமாக்கும் தன்னாா்வலா்கள், மறுசுழற்சி உற்பத்தியாளா்கள், கைவினைப் பொருள் கலைஞா்கள் , மகளிா் சுய உதவிக்குழுவினா் என பல்வேறு அமைப்புகள் சாா்பில் விற்பனையகங்கள் அமைக்கப்பட்டு கைவினைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஏராளமானோா் இதைப் பாா்வையிட்டனா். மாநகராட்சி அலுவலா்கள் ச.நா. சண்முகம், செ. பிரபாகரன், சுப. கமலக்கண்ணன், எஸ். திருஞானம், எஸ்.செல்வபாலாஜி, அ. அக்பா்அலி மற்றும் நேரு இளையோா் மைய மாவட்ட இளைஞா் அலுவலா் ஸ்ருதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.