திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பணியின்போது உயிரிழந்தோரின் வாரிசுகள் 14 பேருக்கு கருணை அடிப்படையில் பணி. ஆணையை நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு வழங்கினார்
திருச்சி மாநகராட்சி கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்துக்கு தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு தலைமை வகித்தாா். மாநகராட்சிப் பகுதி வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்த அவா், திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர உத்தர விட்டாா். மேலும் மக்களுக்குத் தேவையான புதிய திட்டங்களையும், கட்டமைப்புகளையும் உருவாக்கு வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கினாா்.
வாரிசுகளுக்கு பணியாணை: நிகழ்வின்போது, மாநகராட்சியில் பணியாற்றிய நிலையில் இறந்தோரின் வாரிசுகளில் 2 பேருக்கு இளநிலை உதவியாளா் பணியாணை, 10 பேருக்கு அலுவலக உதவியாளா் பணியாணை, 2 பேருக்கு தூய்மைப்பணியாளா் பணியாணை என மொத்தம் 14 பேருக்கு ஆணைகளை வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் சு.சிவசுப்ரமணியன், நகரப் பொறியாளா் அமுதவல்லிரூபவ் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.ஜி. சத்தியபிரகாஷ், செயற்பொறியாளா்கள் சிவபாதம், குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஷாகுல்ஹமித் மற்றும் ஆனந்தன்