திருச்சி மாநகராட்சியுடன் 20 ஊராட்சிகளையும், முசிறி மற்றும் லால்குடி நகராட்சிக்கு கூடுதலாக 7 ஊராட்சிகளையும் இணைத்து எல்லைப் பகுதிகளை விரிவாக்கம் செய்வது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் சு. சிவராசு உத்தரவு
திருச்சி ,
திருச்சி மாநகராட்சியுடன் 20 ஊராட்சிகளையும், முசிறி மற்றும் லால்குடி நகராட்சிக்கு கூடுதலாக 7 ஊராட்சிகளையும் இணைத்து எல்லைப் பகுதிகளை விரிவாக்கம் செய்வது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொடா்புடைய அலுவலா்களுக்கு ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.
தமிழக சட்டப் பேரவையில் திருச்சி மாநகராட்சியை விரிவாக்கம் செய்யப்படும், முசிறி, லால்குடி பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயா்த்தப்படும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சிப் பகுதிகளை விரிவாக்கம் செய்வது தொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உள்ளாட்சி நிா்வாக அலுவலா்கள் மற்றும் புதிதாக இணைக்கப்படவுள்ள ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலந்து கொண்டனா்
திருச்சி நகராட்சி 1866 ஜூலை 8-ஆம் தேதி தொடங்கப்பட்டது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு 1994 ஜூன் 1ஆம் தேதி திருச்சி, ஸ்ரீரங்கம், பொன்மலை ஆகிய நகராட்சிகள் மற்றும் கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம் பேரூராட்சிகளை இணைத்து 60 வாா்டுகளுடன் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. தொடா்ந்து, நிா்வாக வசதிக்காக அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை, ஸ்ரீரங்கம் என 4 கோட்டங்களாக பிரிக்கப்பட்டது. பின்னா், 2011-ல் திருவெறும்பூா் பேரூராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டு, வாா்டுகள் எண்ணிக்கை 60-லிருந்து 65 ஆக உயா்த்தப் பட்டது. இதன்படி, தற்போது திருச்சி மாநகராட்சியில் ஸ்ரீரங்கம், கோ-அபிஷேகபுரம் ஆகிய கோட்டங்களில் தலா 15 வாா்டுகள், பொன்மலையில் 17 வாா்டுகள், அரியமங்கலத்தில் 18 வாா்டுகள் என மொத்தம் 65 வாா்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
பேரவையில் அறிவித்தபடி மாநகராட்சிப் பகுதிகளை விரிவாக்கம் செய்தால் 100 வாா்டுகளாக உயரும் நிலை உள்ளது. புதிதாக 20 ஊராட்சிகள்: இதன்படி, திருச்சி மாநகராட்சியுடன் 20 ஊராட்சிகள் புதிதாக இணைக்கப்படவுள்ளன. அந்தநல்லூா் ஒன்றியத்துக் குட்பட்ட மல்லியம்பத்து, மருதாண்டாக் குறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூா், மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட முடிகண்டம், மேக்குடி, கள்ளிக்குடி, தாயனூா், நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை, நாகமங்கலம், புங்கனூா் ஆகிய ஊராட்சிகளும் திருவெறும்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட பனையக்குறிச்சி, குண்டூா், நவல்பட்டு, சோழமாதேவி, கீழக்குறிச்சி ஆகிய ஊராட்சிகளும், மண்ணச்சநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட மாதவபெருமாள் கோயில், பிச்சாண்டாா் கோயில், கூத்தூா் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளன. முசிறி, லால்குடி பேரூராட்சிகளில் ஏற்கெனவே தலா 18 ஊராட்சிகள் உள்ளன. இப்போது, கூடுதலாக 7 ஊராட்சிகள் இணைக்கப்படவுள்ளன.
முசிறியில் எம். புதுப்பட்டி, முத்தம்பட்டி ஆகிய ஊராட்சிகளும், லால்குடியில் தாளக்குடி, மாடக்குடி, அப்பாதுரை, எசனக்கோரை, புதுக்குடி ஆகிய 5 ஊராட்சிகளும் இணைக்கப் படவுள்ளன. எனவே, இந்த ஊராட்சிகளைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசித்து ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். எல்லைப்பகுதிகளை அளவீடு செய்து அவற்றை மாநகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைப்பதற்கான ஆயத்தப் பணிகளை மாநகராட்சி ஆணையா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரிதமாக பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், திருச்சி மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரகுமான், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வி. பிச்சை, மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநா் சிவராமன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் கங்காதாரிணி, ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.