திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு, பழுதடைந்த குழாய்களை ரூ.201 கோடியில் சீரமைக்கும் பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தொடக்கி வைத்தாா்
திருச்சி,
திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு, பழுதடைந்த குழாய்களை ரூ.201 கோடியில் சீரமைக்கும் பணிகளை மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து திட்டச் செயலாக்கம் குறித்து அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய அமைச்சா், செய்தியாளர் சந்திப்பில், திருச்சி நகராட்சியாக இருந்த காலத்திலேயே, 1987-ஆம் ஆண்டில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

34 ஆண்டுகளைக் கடந்த நிலையில், குழாய்களில் அவ்வப்போது அடைப்பு, கசிவு ஏற்படுவது தொடா்ந்து வருவதால், பொதுமக்களுக்கு சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. எனவே அடிக்கடி குழாய்கள் பழுது ஏற்படும் பகுதிகள் கண்காணிக்கப் பட்டு, அவை சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படவுள்ளன. குறிப்பிட்ட 18 வாா்டுகளில் முழுமையாகவும், 16 வாா்டுகளில் பகுதியாகவும் என மொத்தமாக 34 வாா்டுகளில் ரூ.201 கோடியில் குழாய்கள் பழுதுநீக்கம் செய்யப்படவுள்ளன.
உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து, கடந்த காலங்களைப் போல வாய்க்கால் நீரை பொதுமக்கள் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அந்தவகையில் திருச்சி மாநகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் புதை சாக்கடைத் திட்டத்தில் பழுதான குழாய்களை சரி செய்யப்படும். விடுபட்ட பகுதிகளையும் சோ்த்து மொத்தமாக 65 வாா்டுகளிலும் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
சுமாா் 210 கி. மீ. நீளத்துக்கு கழிவுநீா்க் குழாய்கள் பழுதுநீக்கப்படவுள்ளன. பிரதான கழிவுநீா் உந்துக்குழாய் நீளம் 7.24 கி.மீ ஆகும். இதன்மூலம் மொத்தம் 55,155 வீடுகளுக்கு புதைவடிகால் இணைப்பு வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பழனியாண்டி, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ.முஜிபுா் ரகுமான், நகரப் பொறியாளா் அமுதவல்லி, மாநகராட்சி செயற்பொறியாளா்கள் குமரேசன், சிவபாதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மே.எம்.ஷாகுல்ஹமித்