திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு இன்று 60 அளவிலான கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம்
திருச்சி,
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு இன்று காலை 60 அளவிலான கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இந்த மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் 273 அடி உயரமும் 417 படிகள் கொண்டதாகவும் உள்ளது. இதில் மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும், மலையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சன்னதியும் உள்ளது. இந்த சன்னதியில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை முடிந்து 4- ஆம் நாள் வரும் சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி (விநாயகர் பிறந்த தினமாக) மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்கு நடைபெற்றது. வழக்கமாக இந்த விழாவிற்காக கோவில் மடப்பள்ளியில் 6 கிலோ வரையிலான தேங்காய்ப்பூ, 60 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ அளவிலான உருண்டை வெல்லம், 4 கிலோ விலான ஏழைக்காய், ஜாதிக்காய், எள்ளு மற்றும் 30 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கடந்த 24 மணி நேரத்திற்கு முன்பு நல்ல ஆவியில் வேகவைத்து தயார் செய்யப்படும் கொழுக்கட்டை படையில் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு இதில் இரண்டு கோவிலுக்கும் 30, 30 கிலோ அளவிலான கொழுக்கட்டை தான் செய்யப்பட்டது. இதற்காக வழக்கமான அளவை விட பாதி அளவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கொழுக்கட்டை இன்று காலை கோவில் பணியாளர்கள் தொட்டில் போல கட்டி மடப்பள்ளியில் இருந்து கொண்டு சென்று வைத்து உச்சிப்பிள்ளையாருக்கும் இருக்கும் பின்னர் மாணிக்க விநாயகருக்கும் தூக்கி சென்று படையலிட்டனர்.
கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு அறிவித்துள்ள தடையின் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அனைத்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களிலும் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும். இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கூறியதால் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. படையில் செய்யப்பட்ட கொழுக்கட்டை கோவிலுக்கு வெளியில் இருந்து வெளியில் நின்று தரிசனம் செய்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதற்காக கோவிலில் மாணிக்க விநாயகர் சந்தையிலும் உச்சிபிள்ளையார் சன்னதியிலும் பல்வேறு வகையான பலவகைகள் மலர்களால் ஆன பந்தல் வாழைமரம் கட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.