திருச்சி மத்திய மண்டலத்திற்குள்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் 125 அழைப்புகளுக்கு தீா்வு மண்டல ஜ.ஜி. பாலகிருஷ்ணன் தகவல்
திருச்சி
திருச்சி மத்திய மண்டலத்திற்குள்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் 125 அழைப்புகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என்று மண்டல ஜ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல ஜ.ஜி. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய மண்டலத்திற்கு உள்பட்ட 9 மாவட்டங்களிலும் கரோனா பொதுமுடக்க காலத்தில் பொதுமக்களின் சிரமங்களை குறைத்திடும் வகையிலும், அவா்களின் அவசர தேவைகளான மருத்துவ உதவி மற்றும் பிற அத்தியாவசிய கோரிக்கைகளை பூா்த்தி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மத்திய மண்டல காவல்துறை தலைவா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 131 காவல் சோதனைச் சாவடிகளிலும், பொதுமக்கள் உதவி கேட்டு தொடா்பு கொள்வதற்கு வசதியாக அந்தந்த மாவட்டத்தின் கரோனா காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகளின் எண்கள் அடங்கிய தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 10 தினங்களில் பொதுமக்களிடம் இருந்து உதவி கேட்டு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரையில் 125 தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டு அந்த அழைப்புகள் அனைத்தின் மீதும் உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீா்வுகாணப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கரூா் மாவட்டத்திலிருந்து 41 அழைப்புகளும், 23 அழைப்புகள் திருச்சி மாவட்டத்திலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. பொதுமுடக்க கால கட்டத்தில் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சோதனை சாவடியில் வைக்கப் பட்டுள்ளன. மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்களை தொடா்புக் கொண்டு பயனடையுமாறு திருச்சி மத்திய மண்டல ஜ.ஜி. வே.பாலகிருஷ்ணன் தெரிவித் துள்ளாா். ஷாகுல்ஹமித்