திருச்சி மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழா்களுடன் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
திருச்சி மத்திய சிறையில் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழா்கள் தங்களை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 17 நாள்களாக சிறை வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்..இவா்களிடம் மாாவட்ட ஆட்சியா் சு.சிவராசு சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இலங்கைத் தமிழா்களிடம் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் அரசிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்தாா். அப்போது, கோட்டாட்சியா் விஸ்வநாதன், தனித்துணை ஆட்சியா் ஜமுனா ராணி, பயிற்சி துணை ஆட்சியா் பவித்ரா, காவல்துறையினா் பலா் உடனிருந்தனா்.