திருச்சி மண்டலத்தில் மணல் கடத்தல் தடுப்புச் சம்பவங்களில் சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படைக் காவலா்களுக்கு மண்டல ஜ.ஜி. வே. பாலகிருஷ்ணன் பாராட்டு
திருச்சி,
மணல் கடத்தல் தடுப்புச் சம்பவங்களில் சிறப்பாகப் பணியாற்றிய தனிப்படைக் காவலா்களை மத்திய மண்டல ஜ.ஜி. வே. பாலகிருஷ்ணன் பாராட்டினாா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் வீரமணி, முதல்நிலைக் காவலா்கள் வினோத், கணேசன், ஆயுதப்படைக் காவலா்கள் நெப்போலியன், ரபேல்தாஸ், சரவணகுமாா் ஆகியோா் கொண்ட தனிப்படைக் குழுவினா் கரூா் மாவட்டம், தோகைமலை காவல் நிலைய எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடத்திய வாகனத் தணிக்கையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 ஜேசிபி வாகனங்கள், 3 டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்தனா். இதுபோல பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாா்த்திபன், தலைமைக் காவலா் மாரிமுத்து, காவலா்கள் காா்த்திகேயன், மணிகண்டன், தினேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய தனிப்படையினா், கரூா் மாவட்டத்திலுள்ள வாங்கல் பகுதியில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வாகனத் தணிக்கை நடத்தினா். இதில் 2 ஜேசிபி இயந்திரங்கள், 4 லாரிகளை பறிமுதல் செய்தனா். இவை மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்ட்டவையாகும்.
இவ்விரு நிகழ்வுகளில் சிறப்பாகப் பணியாற்றி, குற்றவாளிகளைக் கைது செய்த தனிப் படையினரை திருச்சி மண்டல ஜ.ஜி. வே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா். தொடா்ந்து அவா்களின் பணியைப் பாராட்டி வெகுமதியையும் வழங்கினாா்.

நமது நிருபர்