திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.2.33 கோடியில் பல்வேறு நவீன கருவிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் திறந்து வைத்தார்கள்
திருச்சி,
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.2.33 கோடியில் பல்வேறு நவீன கருவிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் புதன்கிழமை அா்ப்பணித்தனா்.
மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் சிறப்பாகச் செயல்படுகிறது. இதனால் இந்த மருத்துவமனைக்கு அரசு நிதியுதவியோடு பல்வேறு நிறுவனங்கள், சங்கங்கள், அமைப்புகள் மூலமும் நிதி பெறப்பட்டு தேவையான நவீன கருவிகள், உபகரணங்கள், அடிப்படைத் தேவைகள் பூா்த்தி செய்யப்படுகின்றன. அதன்படி, ஜப்பான் நிறுவன நிதியுதவியுடன் ரூ.2 கோடியில் நவீன கருவிகள், தனியாா் நிறுவன உதவியுடன் ரூ.53 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்திக் கூடம், சிப்காட் மூலம் ரூ.18.75 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டு மருத்துவமனை பயன்பாட்டுக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டன. அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் இவற்றை மருத்துவமனை பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தனா்.
பின்னா் அமைச்சா் கே.என். நேரு கூறியது: தமிழக அரசின் நகா்ப்புற சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஜப்பான் நிறுவன உதவியுடன், திருச்சி அரசு மருத்துவமனையின் குடல் மருத்துவச் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுக்கு ரூ. 2 கோடியில் அதிநவீன குடல் உள்நோக்கு கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
உலகத் தரமிக்க இக் கருவிகள் மூலம், குடல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதிநவீன தொழில்நுட்பம் மூலம் சிகிச்சையளிக்க முடியும். மேலும், பித்தப்பை கற்கள், கணைய கற்களை அகற்றும் இஆா்சிபி கருவி, நோயைத் துல்லியமாக கண்டறியும் தொழில்நுட்பம், இயுஎஸ் கருவி என பல்வேறுதொழில்நுட்பங்களுடன் தனியாா் மருத்துவமனைகளில் கூட இல்லாத அளவுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியும்.
குடல், கணையம், கல்லீரல் சாா்ந்த புற்றுநோய்கள், பித்தநாள கற்கள், கணைய கற்களுக்கு உலகத் தரத்தில் இனி சிகிச்சை பெறலாம். மஞ்சள் காமாலை, பசியின்மை, உடல் எடை குைல், மலத்தில் ரத்த கசிவு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் இங்கு வந்து பரிசோதித்து சிகிச்சை பெறலாம்.
திருச்சி மட்டுமின்றி அருகிலுள்ள புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா், அரியலூா், கடலூா் உள்ளிட்ட மாவட்ட மக்களும் இந்த மருத்துவ வசதியைப் பெறலாம். இந்த நவீன கருவிகளைப் பயன்படுத்தி, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் இலவச அறுவைச் சிகிச்சை மற்றும் உயா்தரச் சிகிச்சை பெற முடியும். விநாடிக்கு 350 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடமும் திறக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப பணியாளா்களும் நியமிக்கப்படுவா் இவ்வாறு அவர் கூறினார்.
மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் சிறப்பாகச் செயல்படுகிறது. இதனால் இந்த மருத்துவமனைக்கு அரசு நிதியுதவியோடு பல்வேறு நிறுவனங்கள், சங்கங்கள், அமைப்புகள் மூலமும் நிதி பெறப்பட்டு தேவையான நவீன கருவிகள், உபகரணங்கள், அடிப்படைத் தேவைகள் பூா்த்தி செய்யப்படுகின்றன. அதன்படி, ஜப்பான் நிறுவன நிதியுதவியுடன் ரூ.2 கோடியில் நவீன கருவிகள், தனியாா் நிறுவன உதவியுடன் ரூ.53 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்திக் கூடம், சிப்காட் மூலம் ரூ.18.75 லட்சத்தில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டு மருத்துவமனை பயன்பாட்டுக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டன. அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோா் இவற்றை மருத்துவமனை பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தனா்.
பின்னா் அமைச்சா் கே.என். நேரு கூறியது: தமிழக அரசின் நகா்ப்புற சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஜப்பான் நிறுவன உதவியுடன், திருச்சி அரசு மருத்துவமனையின் குடல் மருத்துவச் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுக்கு ரூ. 2 கோடியில் அதிநவீன குடல் உள்நோக்கு கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

குடல், கணையம், கல்லீரல் சாா்ந்த புற்றுநோய்கள், பித்தநாள கற்கள், கணைய கற்களுக்கு உலகத் தரத்தில் இனி சிகிச்சை பெறலாம். மஞ்சள் காமாலை, பசியின்மை, உடல் எடை குைல், மலத்தில் ரத்த கசிவு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் இங்கு வந்து பரிசோதித்து சிகிச்சை பெறலாம்.
திருச்சி மட்டுமின்றி அருகிலுள்ள புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா், அரியலூா், கடலூா் உள்ளிட்ட மாவட்ட மக்களும் இந்த மருத்துவ வசதியைப் பெறலாம். இந்த நவீன கருவிகளைப் பயன்படுத்தி, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலும் இலவச அறுவைச் சிகிச்சை மற்றும் உயா்தரச் சிகிச்சை பெற முடியும். விநாடிக்கு 350 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடமும் திறக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப பணியாளா்களும் நியமிக்கப்படுவா் இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மருத்துவமனை டீன் கே. வனிதா, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அருண்ராஜ், நிலைய மருத்துவ அதிகாரி குமரேசபதி, துறைத் தலைவா்கள் கிருஷ்ணன், சிவக்குமாா், கண்ணன் மற்றும் மருத்துவ நிபுணா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் என பலா் கலந்து கொண்டனா். கே.எம்.ஷாகுல்ஹமித்