திருச்சி புலிவலம் உய்யக்கொண்டான் வாய்க்காலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு
கல்லணையில் 90.96 கோடி ரூபாய் செலவில் 1050 மீட்டர் நீளமுள்ள புதிய பாலத்தை திறந்து வைத்தார். மேலும் கல்லணையில் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து திறக்கப்பட்ட புது பாலம் வழியாக தஞ்சாவூர் சென்று தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது திருச்சி மாவட்ட உய்யகொண்டான் வாய்க்கால் பாசன விவசாயிகளின் கோரிக்கையின் படி கொடியாலம் மற்றும் புலிவளம் பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்கால் 100 மீட்டர் முதல் 1200மீட்டர் வரை 29.70லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் சார்பாக ஸ்ரீரங்கம் வட்டம் கொடியாலம் மற்றும் புலிவலம் கிராமம் மணற்போக்கில் இருந்து செல்லும் உய்யக்கொண்டான் வடிகால் வாய்க்கால் தூர் வார வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை வைத்தனர்.
இந்த கோரிக்கையின் அடிப்படையில் பெட்டவாய்த்தலையில் இருந்து காவிரி ஆற்றில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு சுற்றி மீண்டும் காவிரி ஆற்றில் கலக்கும் இந்த உய்யக் கொண்டான் ஆற்றின் வாய்க்காலில் இடது கரையில் மணற்போக்கி அமைந்துள்ளது.
இம்மணற்போக்கி மூலம் செல்லும் வடிகால்
வாய்க்காலானது புலிவலம் கிராமத்தில் ஆரம்பமாகி கொடிங்கால் வடிகாலில் கலந்து காவிரி ஆற்றில் கலக்கிறது. வடிகால் வாய்க்கால் தூர் அடைந்தும் மணல் மேடுகளிட்டும், செடி கொடிகள் வளர்ந்து நீரோட்டத்திற்கு தடையாக காணப்பட்டது. இதனால் மழை மற்றும் வெள்ள காலங்களில் வரும் கூடுகள் நீரினால் நீரோட்டம் தடை ஏற்பட்டு அப்பகுதி பாசன நிலங்கள் மற்றும் கிராமப் பகுதிகள் மிகவும் பாதிக்கப் படக்கூடிய நிலை இருந்தது. எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தொடர்ந்து இப்பகுதியில் 29.70 70 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 11.06.2022` இன்று மதியம் ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த ஆய்வின் போது நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக் கரசர், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சவுந்திரபாண்டியன், பழனியாண்டி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, பொதுப்பணித் துறையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஷாகுல்ஹமித்