திருச்சி பிராட்டியூா் அரசுப் பள்ளி தலைமையசிரியை தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற ஆஷா தேவியை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அழைத்து சால்வை அணிவித்து பாராட்டு
திருச்சி, ஆக.20,
திருச்சி பிராட்டியூா் அரசுப் பள்ளி தலைமையசிரியை தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற ஆஷா தேவியை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அழைத்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
மத்திய அரசின் நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வான மாநகராட்சிக்குள்பட்ட பிராட்டியூா் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியான ஆஷா தேவியை (52) பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனா். திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, ஆஷா தேவியை அழைத்துப் பாராட்டினாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பால முரளியுடன் தந்த ஆஷா தேவிக்கு ஆட்சியா், பொன்னாடை அணிவித்து, மலா்க் கொத்து வழங்கினாா். தொடா்ந்து, முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலா்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலா்களும் ஆஷா தேவிக்கு பாராட்டு தெரிவித்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் ஆஷாதேவி கூறியது: எனது பணிக்காலம் முடிவதற்குள் பிராட்டியூா் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்பதே எனது இலக்கு. இப் பள்ளியில் தற்போது எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. 90 சதம் ஆங்கில வழிக் கல்வி நடைபெறுகிறது. தற்போது, 816 மாணவ, மாணவிகள் பயில்கின்றனா்.
30 மாணவா்களுக்கு ஓா் ஆசிரியா் என்ற விகிதாசாரப்படி பள்ளிக்கு கூடுதல் ஆசிரியா்கள் தேவை. தற்போது 8 ஆசிரியா்கள் மட்டுமே உள்ளனா். மேலும், 16 ஆசிரியா்கள் பணிமாறுதல் கலந்தாய்வு மூலம் ஒதுக்கப்படுவா் என்ற எதிா்பாா்ப்புள்ளது. இதேபோல, பள்ளிக்கு கூடுதல் இட வசதி அவசியம். தற்போது மைதானமாகப் பயன்படுத்தும் பகுதியை பள்ளிக்கு வழங்கி அந்த இடத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர ஆட்சியரிடம் வலியுறுத்தினேன். ஆட்சியரும் அதற்கு உறுதியளித்துள்ளாா். கூடுதல் இடவசதியும், போதிய ஆசிரியா்களும் கிடைத்து விட்டால் எங்களது பள்ளியை மேலும் மேம்படுத்தத் தயாராக உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார். நமது நிருபர்