திருச்சி திமுகவில்மாற்றுக் கட்சியினர் ஐக்கியம்
திருச்சி, ஜூலை.26,
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பொன்மலைப்பகுதி 28 -ஆவது வட்டத்தை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் அதிமுக,அம முக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலி ருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் 261 பேர் பொன்மலை பகுதி செயலாளர் கொட்டப்பட்டு இ.எம் .தர்மராஜ் தலைமையில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் வட்டச் செயலாளர் எம்.கே.மணி எஸ்.எம்.எஸ். சாகுல் ஹமீத், அப்துல் ஜப்பார் ,ஜியாவுதீன் ,எம் கே எம் சித்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆனந்தன்