திருச்சி கோவில்களுக்குச் செல்ல பக்தர்கள செல்ல தடை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அறிவிப்பு
ஆகஸ்ட்.01-
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் ,திருக்கோயில் ,அருள்மிகு வயலூர்முருகன் திருக்கோயில் ,,திருவானைக்காவல் ,அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ,மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் ,மற்றும் உறையூர் வெக்காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் வருகிற ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய இரு நாட்களில் நடைபெறவிருக்கும் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு முதலிய நிகழ்வுகளில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக திருக்கோயில் அர்ச்சகர்கள் கலந்துகொண்டு ஆகம விதிகளின் படி பூஜை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர் .மேலும் நோய்த்தொற்றின் காரணமாக இந்த இரு நாட்களில் பொதுமக்கள் தரிசனத்தில் கலந்து கொள்ள அனுமதியில்லை.மேலும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட காவிரி ஆற்றின் கரைகளில் பொதுமக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் அனுமதி இல்லையென இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தனது செய்திக்குறிப்பில்தெரிவித்துள்ளர். ஆனந்தன்