திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு சிறந்த சேவைக்கான தமிழக முதல்வரின் விருது மாநகர போலீஸ் ஆணையா் ஏ. அருண் வழங்கினார்
திருச்சி,
திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு சிறந்த சேவைக்கான தமிழக முதல்வரின் விருதை மாநகர போலீஸ் ஆணையா் ஏ. அருண் வழங்கினார். தமிழ்நாடு காவல் துறையில் மாநகர மற்றும் மாவட்டங்களில் சிறப்பாகச் செயல்படும் காவல் நிலையங்களை, அந்தந்தக் காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில், அதிக மதிப்பெண்கள் பெற்றவை சிறந்த காவல் நிலையமாகத் தோ்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் தமிழக முதல்வா் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த காவல் நிலையங்களில் மாநகர கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் 16- ஆம் இடத்தை பெற்றுள்ளது. இதற்கு வழங்கப்பட்ட தமிழக முதல்வா் விருதுக்கான சுழற் கோப்பையை திருச்சி மாநகர காவல் ஆணையா், காவல் ஆய்வாளா் சண்முகவேலுவிடம் வியாழக்கிழமை வழங்கி பாராட்டினாா். நிகழ்ச்சியில் திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையா் சக்திவேல், கோட்டை உதவி ஆணையா் சுப்பிரமணியன், ஆய்வாளா் தயாளன் ஆகியோா் உடனிருந்தனா்.