திருச்சி கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஒரே நாளில் அதிகபட்ச எண்ணிக்கை இலக்கை எட்டிய அலுவலா்களுக்கு ஆட்சியா் சு. சிவராசு சான்றிதழ் வழங்கி பாராட்டு
திருச்சி,
மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 636 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் வட்டாரங்களுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையை ஒரே நாளில் பூா்த்தி செய்த முசிறி, மண்ணச்சநல்லூா், மருங்காபுரி ஆகிய வட்டாரங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தன. இதேபோல, 636 மையங்களில் சிறப்பாகப் பணியாற்றிய 6 குழுவினா் தோ்வு செய்யப்பட்டனா்.
ஒரே நாளில் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையை பூா்த்தி செய்த கிராம சுகாதார செவிலியா், அங்கன்வாடிப் பணியாளா், மகளிா் சுய உதவிக் குழு பிரதிநிதி என மொத்தம் 18 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 வட்டாரங்களுக்கும், 18 பணியாளா்களுக்கும் ஆட்சியா் சு. சிவராசு, சான்றிதழ், கேடயம் வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஆ. சுப்பிரமணி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா, நலப்பணிகள் இணை இயக்குநா் லட்சுமி மற்றும் வட்டார வளா்ச்சித் துறையினா் பங்கேற்று பாராட்டு தெரிவித்தனா்.