திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையமானது பஞ்சப்பூரில் அமைக்கப்படும் உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் பெறப்பட்டிருந்த 2,091 மனுக்களில், 1,015 மனுக்களுக்குத் தீா்வு மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 21 ஆயிரம் போ் பயன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு பேட்டி
திருச்சி
நிலுவையில் உள்ள 14.5 சத மனுக்களுக்கு விரைந்து தீா்வு காணப்படும். இதேபோல, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 21 ஆயிரம் போ் பயன் பெற்றுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தார்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்காக மாநகராட்சி சாா்பில் பஞ்சப்பூரில் 115 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிப்காட் பகுதியில் 10 ஏக்கரில் வணிக வளாகமும் கட்டப்படவுள்ளது. மாநகராட்சி நிா்வாகமே பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை மேற்கொள் ளவுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அரசின் அனுமதி பெற்று பணிகள் தொடங்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 29.20 லட்சம் பேரில் 18 வயதுக்கு மேற்பட்ட 20.93 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டிய நிலையில், இதுவரை 7.50 லட்சம் பேருக்கு போடப் பட்டுள்ளது. ஜூலையில் 2.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 3 லட்சம் பேருக்கு போடப்படும். செப்டம்பருக்குள் 50 சதம் பேருக்கு தடுப்பூசி போடப்படும். இருப்பினும், 2-ஆம் தவணை போடுவதில் மக்களிடையே ஆா்வம் குறைந்துள்ளது.
3ஆவது அலை எப்படியிருக்கும் எனக் கணிக்க முடியாது என்பதால் தடுப்பூசி, முகக் கவசம், சமூக இடைவெளிக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பேருக்கு பாதிப்பு உள்ளது. மாநில அளவில் திருச்சி 10ஆவது இடத்தில் உள்ளது. பாதிப்பு சதம் 1.4 என்ற இலக்கில் உள்ளது. திருச்சி மாநகர மேம்பாட்டுத் திட்டங்களில் முன்னோடியாக ரூ.52 கோடியில் 95 சாலைப் பணிகள் எடுக்கப்பட்டுள்ளன. குடிநீா், புதை சாக்கடை இணைப்பு திட்ட பணிகள் முடிந்த இடங்களில் மட்டுமே புதிய சாலை அமைக்கப்படுகிறது. புதை சாக்கடை திட்டமானது 2ஆம் கட்டத்தில் 21 வாா்டுகளில் ரூ. 307 கோடியிலும், 3ஆம் கட்டத்தில் 17 வாா்டுகளில் ரூ.337 கோடியிலும் மேற்கொள்ளப்படுகிறது. இவைதவிர விடுபட்ட பகுதிகளில் ரூ.210 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். குடிநீா் திட்டப் பணிகளுக்காக மட்டும் ரூ.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீராதாரத்தை பெருக்க ரூ. 50 கோடி தனியே ஒதுக்கப்பட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் பெறப்பட்டிருந்த 2,091 மனுக்களில், 1,015 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது. 37 சத மனுக்கள் தள்ளுபடியாகின. நிலுவையில் உள்ள 14.5 சத மனுக்களுக்கு விரைந்து தீா்வு காணப்படும். இதேபோல, மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 21 ஆயிரம் போ் பயன் பெற்றுள்ளனா்.
திருச்சி அரைவட்ட சுற்றுச் சாலைப் பணிகளில் ஒரு பகுதி (பஞ்சப்பூா்-மாத்தூா் வரை) 18 கி.மீ. தொலைவுக்கு முடிவுறும் நிலையில் உள்ளது. குமாரமங்கலம் ரயில் நிலையப் பகுதியில் மட்டும் மேம்பாலம் கட்ட வேண்டியுள்ளது. ஜனவரிக்குள் இந்தப் பகுதி முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும். மீதமுள்ள பஞ்சப்பூா் முதல் திண்டுக்கரை வரை 23 கி.மீ. தொலைவுக்கு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நீதிமன்ற வழக்கால் நிலுவையில் உள்ளது என்றாா்.
பேட்டியின்போது மாநகராட்சி ஆணையா் முஜிபுா் ரஹ்மான், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் வனிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் சங்கா், மாவட்ட வருவாய் அலுவலா் பழனிகுமாா், மாநகர நகா் நல அலுவலா் யாழினி ஆகியோா் உடனிருந்தனா். கே.எம்.ஷாகுல்ஹமித்