திருச்சி என்.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 310 பேருக்கு தடுப்பூசி.
திருச்சி என்ஐடி வளாகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 310 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
என்ஐடி முன்னாள் மாணவா்கள் அமைப்பு (ரீகல்) சாா்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்படும் நிலையில், என்ஐடி வளாகத்தில் அந்த அமைப்பு சாா்பில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை நிறுவன இயக்குநா் மினிஷாஜி தாமஸ் பாா்வையிட்டாா். மருத்துவா்கள் உமாபதி, அரிவாசகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
என்ஐடி இயக்குநா் கூறுகையில், தற்போதைய சூழலில்அனைவரையும் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் ஊழியா்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். முகாமில் ஒரே நாளில் 310 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன இவ்வாறு அவர் கூறினார். என்ஐடி மருத்துவ அதிகாரி ஆா். பிரியங்கா மற்றும் மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தினா்.
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 191 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68,686 ஆனது. குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 66,782 ஆக உள்ளது. இதுவரை 896 போ் உயிரிழந்த நிலையில், வீடுகள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,008 ஆக உள்ளது.
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,521 படுக்கைகள், அவசரப் பிரிவில் 278 படுக்கைகள், 1,344 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 3,143 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஷாஹுல் ஹமீது.