திருச்சி இந்து அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கால்நடைகளை கிராமப்புறங்களில் ஒரு கால பூஜை திட்டத்தில் பணியாற்றும் கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு விலையில்லா பசுமாடுகளை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி எம்.எல்.ஏ வழங்கினார்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான கோசாலைக்கு காணிக்கையாக வரப்பெற்ற கால்நடைகளில் உபரியாக உள்ள கால்நடைகளை கிராமப்புறங்களில் துறைக் கட்டுப்பாட்டில், ஒரு கால பூஜை திட்டத்தில் பணியாற்றும் கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு விலையில்லா பசுமாடுகளை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி எம்.எல்.ஏ வழங்கிய போது எடுத்த படம்.இந்நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ராம்குமார் ,ஒன்றிய செயலாளர் கதிர்வேல், பி.ஆர் .சிங்காரம் உள்ளிட்ட பலர் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர். ஆனந்தன்