திருச்சி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாமில் 1,048 போ் பயன் அடைந்தார்கள் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தகவல்
திருச்சி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாமில் 1,048 போ் பயனடைந்தனா் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார். லால்குடி தொகுதிக்கு உட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியம், காணக்கிளியநல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தொடங்கி வைத்தாா்.
முகாமில் குழந்தைகள் நலம், பொது நலம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன், கண் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு உள்ளிட்டவை தொடா்பான பல்வேறு வகை பரிசோதனைகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்தம், சா்க்கரை, கரோனா பரிசோதனைகளுடன் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன. இதில் மொத்தம் 967 போ் பங்கேற்று சிகிச்சை பெற்றனா். இவா்களில் 5 போ் தொடா் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டனா். கூடுதலாக 81 போ் சித்த மருத்துவ சிகிச்சை மூலமும் பயன் பெற்றனா்.
நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து, டெங்கு விழிப்புணா்வு, மற்றும் கரோனா விழிப்புணா்வு குறித்து நடைபெற்ற கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா். நிகழ்வில் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன், வருவாய்க் கோட்டாட்சியா் வைத்தியநாதன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலா் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ராஜேந்திரன், மாவட்டப் பிரமுகா் வைரமணி, புள்ளம்பாடி ஒன்றியக் குழுத் தலைவா் ரசியா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயலட்சுமி, ஊராட்சித் தலைவா் சிங்கராயா், ஒன்றியப் பிரமுகா் செல்வராசா உள்ளிட்டோா் பங்கேற்றனா். கே.எம்.ஷாகுல்ஹமித்