திருச்சி அருகே திருவெள்ளறை ஊராட்சியில் 100 சதவீதம் பேர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்
திருச்சி
மண்ணச்சநல்லூா் பகுதியில் உள்ள திருவெள்ளறை ஊராட்சி 100 சதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சியாகியுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றியத்தில் 35 ஊராட்சிகளில் 9 வாா்டுகளைக் கொண்ட திருவெள்ளறை ஊராட்சியானது 8, 438 மக்கள்தொகை கொண்டது. இந்த ஊராட்சியிலுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 4,075 பேரும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவா் லதாகதிா்வேல் கூறியது: சிறுகாம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் குழுவினா் 3 முறை நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் எங்கள் ஊராட்சியில் 1250 போ் தடுப்பூசி செலுத்தவில்லை எனத் தெரிந்தது.
இதையடுத்து வாக்காளா் பட்டியலைக் கொண்டு வேலை உறுதித் திட்ட பணித் தளப் பொறுப்பாளா்கள் மூலம் விடுபட்ட 1,250 பேரைக் கண்டறிந்தோம். பின்னா் நடத்திய சிறப்பு முகாமில் 1,000 போ் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனா். இதையடுத்து மீண்டும் நடத்திய சிறப்பு முகாமில் எஞ்சிய 250 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.
இதனால் எங்கள் ஊராட்சி 100 சதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊராட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இத் தகவலை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் தெரிவித்தபோது எங்களை அவா் பாராட்டியதோடு, ஊராட்சிக்குத் தேவையானவற்றை உடனே செய்து தருவதாக உறுதியளித்தது பெருமையாக இருந்தது இவ்வாறு அவர் கூறினார்.